ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“விரைவில் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து வழங்குக” மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியம் கோரிக்கை!

“விரைவில் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து வழங்குக” மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியம் கோரிக்கை!

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்த, தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் எனவும் கோவையில் புதிய எய்ம்ஸ் மருதுவமனை அமைக்க அனுமதி கோரப்பட்டதாகவும் கூறினார். மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

First published:

Tags: Corona Vaccine, Ma subramanian, Nasal Vaccine