கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்களை சரியாக வழங்குக: தலைமை செயலாளர் இறையன்பு

தலைமை செயலாளர் இறையன்பு

இறப்பு மற்றும் வாரிசு சான்றிதளை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களை விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது
  நோயாளிகளின் பெயர், முகவரி, வயது மற்றும் பிற விவரங்களை முறையாக பதிவேற்றப்படுதில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனால் நோயாளிகள் இறக்க நேரிடும் போது இறப்பு சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்களைப் பெறுவதற்கு உறவினர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

  இது தொடர்பாக அரசு பலமுறை அறிவுறுத்தியும் முறையாக பின்பற்றப்படுவதில்லை.

  எனவே, இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து, இறந்தவரின் சரியான விவரங்களை பதிவேற்றும்படி மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், என தெரிவித்துள்ளார்.

  Also read: தமிழகத்தில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 200க்கும் கீழ் குறைந்த உயிரிழப்பு

  அதே போல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் பெயர், வயது முகவரி உள்ளிட்ட விவரங்கள் முறையாக பதிவு செய்ய மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

   
  Published by:Esakki Raja
  First published: