Home /News /tamil-nadu /

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

1964 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் இந்தியாவில் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் எம்.பி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

    நாடாளுமன்றத்தில் விதி 377 இன் கீழ் அவர் தெரிவித்ததாவது, “ இலங்கையில் நடைபெற்ற இன அழித்தொழிப்புப் போரின் போது தப்பித்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களில் சுமார் 60 சதவீதமானவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர்களது முன்னோர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இலங்கையில் இருக்கும் தேயிலைத் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கென்று அங்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய பின்னர் அங்கு இயற்றப்பட்ட 1948 ஆம் ஆண்டு இலங்கை குடியுரிமைச் சட்டத்தைப்  பயன்படுத்தி சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் எல்லோரையும் நாடற்றவர்களாக ஆக்கிவிட்டனர்.

    இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமுணி உட்பட 17 பேர் மீது ஒப்பந்த முறைகேடு வழக்கு


    இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1964 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் இந்தியாவில் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டனர். மீதமுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களையும் இந்தியாவில் மீள் குடியமர்த்தம் செய்வதற்கு 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இந்திய அரசு சம்மதம் தெரிவித்திருந்தது.


    மேலும் படிக்க: வர்த்தகம், கடல்சார் பாதுகாப்புக்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் - ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உரை


    அண்மையில்  சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்திய வம்சாவளித் தமிழர்களை மீள்குடியமர்த்தம் செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய ய அரசை வலியுறுத்தி உள்ளது. இந்தச் சூழலில் , தமிழ்நாட்டின் அகதி முகாம்களில்  இருக்கும் இந்திய வம்சாவளிய் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Parliament, Srilankan Tamil

    அடுத்த செய்தி