ஜெய்ஹிந்த்.. இந்த வார்த்தை கடந்த சில நாள்களாக தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக எழுந்துள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி எம்.எல்.ஏ-வான ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழக சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார்.
அப்போது கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது’’என்று பேசியிருந்தார்.
சட்டமன்றத்தில் ஈஸ்வரன் பேசியபோது எந்த கலகமும் எழவில்லை. ஈஸ்வரன் பேசிய முழுஉரையை கேட்டவர்கள் இதில் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. அவர் பேசிய ஓரிரு நாள்களுக்கு பிறகு இந்த
ஜெய்ஹிந்த் விவகாரம் சூடுபிடித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினர் ஈஸ்வரனின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்குகின்றனர். தேசப்பற்றை வெளிப்படுத்தும் வாக்கியமான ஜெய்ஹிந்த் வார்த்தை நீக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்பது போல ஈஸ்வரன் பேசியதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
‘நான் சட்டமன்றத்திலே ஜெய்ஹிந்த் என்ற வார்தையை பற்றி நான் பேசிய விஷயத்தை, என்னுடைய உரையை முழுமையாக கேட்காமல் அதனை 15 நொடிகளுக்கு எடிட் செய்து அதன்மூலம் அரசியல் செய்து வருகின்றனர். மொழி சம்மந்தமாக இரு அரசின் ஆளுநர் உரையைதான் ஒப்பிட்டு பேசினேன் என்பதை உரையை முழுமையாக கேட்பவர்களுக்கு தெரிந்திருக்கும். இதனை பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்ததுதான் என்பதை அனைவரும் அறிவார்கள்” என
ஈஸ்வரனும் விளக்கம் அளித்துவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த சண்டைக்கு மத்தியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பெருமையோடு செல்வோம் என்ற ஹேஷ்டேக்கில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜெய்ஹிந்த் என்று முழங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.