• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் பெருமை - ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் பெருமை - ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் பெருமை - ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் பெருமை - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் 15வது ஆளுநராக ஆர் என்.ரவி பதவியேற்றுக் கொண்டார். பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநரானதில் பெருமை எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

  • Share this:
    தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில முழுநேர ஆளுநராக சமீபத்தில் மாற்றப்பட்டார். நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த வியாழனன்று, தமிழகம் வந்த ஆர்என் ரவிக்கு தமிழக அரசு சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சனிக்கிழமை பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    காலை 10 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

     தொடர்ந்து, ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், புத்தகத்தை அளித்து வாழ்த்து தெரிவித்தார், பினனர் துறை சார்ந்த அமைச்சர்களை ஆளுநருக்கு முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், செழுமையான மொழியான தமிழை விரைவில் கற்பேன் எனவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

    Also read: 
    ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை: திருமாவளவன்

    பத்திரிகை துறையில் சில காலம் இருந்தாலும் விரிவான அனுபவம் தமக்கு இருப்பதாகவும், மாவட்டங்கள்தோறும் ஆய்வு நடத்தும் தேவை ஏற்பட்டால் அதைப்பற்றி அடுத்தகட்டமாக சிந்திக்க உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

    கொரோனா பெருந்தொற்று நேரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு தொற்றை குறைத்ததாகவும் ஆளுநர் பாராட்டினார். இதனிடையே, அளுநர் பதவியேற்பு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட கட்சிகள் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: