வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக அரசைக் கண்டித்தும் 28.09.2020 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம்
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 5:19 PM IST
  • Share this:
திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "நாடாளுமன்ற நெறிமுறைகளை மிதித்து, கொண்டுவரப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்களுக்கு அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறது; ஆதரித்திருக்கும் அதிமுக அரசுக்கும் வன்மையான கண்டனங்கள்.

அத்தியாவசியத் திருத்தச் சட்டம்

12 மாதங்களாக 100% விலை ஏற்றம் உள்ள விளை பொருட்களுக்கு மட்டுமே இருப்பு வரம்புக் கட்டுப்பாடு என்பது கார்ப்பரேட்களுக்கு சாதகமான நிபந்தனை. விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலை கூட கேள்விக்குறியாகும்.


விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான
விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளுடன் 5 வருட ஒப்பந்தம்; விநியோகம் செய்ய வேண்டிய நேரம், விலை, தரம், அளவு, தர நிர்ணயக் கட்டுப்பாடுகள்; மூன்றாவது நபரின்தரச்சான்று; எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் உள்ளிட்ட பிரிவுகள் அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.Also read: விவசாய மசோதா நிறைவேற தமிழக அரசும் காரணம் - தமிழ்நாடு விவசாய சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்

மின்னணு வர்த்தகம், விவசாயிகளுக்கு நிரந்தர கணக்கு எண் உள்ளிட்டவை வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக்
கூடங்கள், உழவர் சந்தைகளை அறவே ஒழிக்கும்; மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசே கைப்பற்றிக்
கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று
மத்திய அரசை வலியுறுத்தியும் - அதற்குத் துணை போகும் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் 28.09.2020 (திங்கட்கிழமை) காலை 10.00 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி மற்றும்
ஒன்றியங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading