ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்ததற்கு எதிர்ப்பு... கடலூரில் லேஸ் பொட்டலங்களை எரித்து போராட்டம்!

விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்ததற்கு எதிர்ப்பு... கடலூரில் லேஸ் பொட்டலங்களை எரித்து போராட்டம்!

லேஸ் பொட்டலங்களை எரித்து போராட்டம் நடத்தும் விவசாய சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர்

லேஸ் பொட்டலங்களை எரித்து போராட்டம் நடத்தும் விவசாய சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர்

லேஸ் மற்றும் பெப்சி நிறுவனத்தை கண்டித்து முழக்கம் எழுப்பிய மார்க்சிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கடலூரில் லேஸ் பொட்டலங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், லேஸ் மற்றும் பெப்சி நிறுவனத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

  லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு பயிரிட்ட குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 4 விவசாயிகளிடம் இருந்து ரூ.1 கோடி கேட்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Also read... ரூ.1.05 கோடி கேட்டு பெப்சி நிறுவனம் வழக்கு... அதிர்ச்சியில் விவசாயிகள்...!

  இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்ததை கண்டித்து கடலூரில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் தலைமையில் கடலூர் அண்ணாபாலம் அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் விவசாயிகள் லேஸ் பொட்டலங்களை கீழே கொட்டி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும் லேஸ் மற்றும் பெப்சி நிறுவனத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதனை தொடர்ந்து விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Cuddalore