அரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு

Youtube Video

மதுரையில் கடன் தொல்லையால் இரண்டு மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தின் போது வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்து திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படம் கடந்த சில நாட்களுக்கு முன் அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து சத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மீண்டும் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 5 கிலோமீட்டர் தொலைவுக்கு அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த நிலையில், சத்திரக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போகளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லம்மாள் வந்த வாகனத்தை பாஜகவினர் எட்டி உதைத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: