• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து குடியாத்தத்தில் உண்ணாவிரத போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து குடியாத்தத்தில் உண்ணாவிரத போராட்டம்

போராட்டம்

போராட்டம்

ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சி சார்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

  • Share this:
    பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சி சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சி சார்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம், குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் அக்கட்சியின் தேசிய செயலாளர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மக்களை பாதிக்கும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    Must Read : பெட்ரோல், டீசல் விலை 19 நாட்களாக உயராததற்கு இதுதான் காரணம் - ப.சிதம்பரம்

    போராட்டம்


    இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் நீதி மயம், இந்திய குடியரசு கட்சி, உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களும் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    செய்தியாளர் - கோபி, குடியாத்தம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: