மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

தஞ்சையை பிரித்து 36-வது மாவட்டமாக கும்பகோணத்தை அறிவிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதனுடன், நாகப்பட்டினத்தை பிரித்து மயிலாடுதுறையையும் புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
மயிலாடுதுறை கடையடைப்பு
  • News18
  • Last Updated: July 19, 2019, 9:49 PM IST
  • Share this:
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களான நெல்லையை பிரித்து தென்காசியை தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை பிரித்து 1991-ம் ஆண்டு அக்டோபரில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் தனி மாவட்டங்களாக உதயமானது.

நாகையின் வடக்கே உள்ள கொள்ளிடம் பழையாறு, மற்றும் மயிலாடுதுறை மக்கள் தலைநகருக்கு வரவேண்டுமென்றால், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வழியாக செல்ல வேண்டும்.

இதற்காக, 4 மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், துறை சார்ந்த வேலை மற்றும் சான்றிதழ் பெற மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும்,  மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், தரங்கம்பாடியில்  உள்ள சுமார் 10,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வணிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 நாட்கள் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, சீர்காழியில் நாளை (சனிக்கிழமை) கடையடைப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Watch: டிக் டாக், ஹலோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

First published: July 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்