ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம்.. ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம்.. ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Jactto Geo Protest : 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்ட குழுவினரின் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெறும் என்றும், தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம், மனிதசங்கிலி போராட்டம் என மூன்று கட்ட போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும், திமுக அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும், அரசின் கார்ப்பரேட் சிந்தனைக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாகவும் ஜாக்டோ - ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Protest, Tamilnadu