பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. இதனிடையே ஜல்லிக்கட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த பாடலாசிரியர் தாமரை, “ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பரிக்க, என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் திகைக்கும் மாட்டை நூற்றுக்கணக்கானோர் துரத்தி, இழுத்து, குத்தி, சாய்த்து 'வீரப்பட்டம்' வாங்குவது கேவலத்திலும் கேவலம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு தமிழருக்குத் தேவையில்லை, அதை வீர விளையாட்டாகக் கருதாமல் வன்கொடுமையாகக் கருதி, தடை செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த கருத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் கவிஞர் தாமரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இளைஞரணி தலைவர் ராஜேஷ், “கவிஞர் தாமரை திரைப்பட பாடல் எழுதுவதில் தனது கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளட்டும். தமிழனின் மரபுகளை மறக்கடிக்க, ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு வேறு கூட்டத்துடன் சேர்ந்து அவர் சதி செய்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது. கவிஞர் தாமரை தனது கருத்திற்கு மறுப்பு தெரிவித்து அறிவிக்கை வெளியிடாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். தமிழகம் முழுவதும் அவரது கொடும்பாவியை எரிப்போம்” என்று தெரிவித்துள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu