• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ”ஆசாமிகளை சாமிகளாக மாற்ற கூடியவர் ஐயப்பன்” - பாஜக தலைவர் பேச்சு

”ஆசாமிகளை சாமிகளாக மாற்ற கூடியவர் ஐயப்பன்” - பாஜக தலைவர் பேச்சு

கோவையில் ஐயப்ப சேவா சங்கம் பேரணி

கோவையில் ஐயப்ப சேவா சங்கம் பேரணி

  • News18
  • Last Updated :
  • Share this:
    சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெருகிறது. இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவையில் ஐயப்ப சேவா சங்கத்தினர் பிரமாண்ட பேரணியை நடத்தினர்.

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவையில் ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் குழந்தைகளும், பெண்களும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். அத்துடன், இளைஞர்கள் பஜனை பாட்டு பாடி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், மத்திய கயிறு வாரிய தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஆசாமிகளை சாமிகளாக மாற்ற கூடியவர் ஐயப்பன் என்றார். மேலும், சட்டம் படித்தவர்களும், பகுத்தறிவுவாதிகளும், ஐயப்பனை எப்படி வணங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடாது என்றும், அதை இந்து தர்மம் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: