• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Protest against Petrol diesel Price Hike | பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் நடக்கும் போராட்டம்...

Protest against Petrol diesel Price Hike | பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் நடக்கும் போராட்டம்...

 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் நடக்கும் போராட்டம்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் நடக்கும் போராட்டம்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

  • Share this:
    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. விலை ஏற்றத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாகர்கோவிலில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பெட்ரோல் விலையை குறைக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சென்னை திருவொற்றியூர் தபால் நிலையம் முன் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டக்காரர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில், லாரி உரிமையாளர்கள் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 29, 2021)

    திண்டுக்கல்லில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: