இங்கும் போராட்டமா...? முதல்வர் பழனிசாமிக்கு லண்டனில் காத்திருந்த அதிர்ச்சி!

லண்டனில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

  • News18
  • Last Updated :
  • Share this:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி லண்டன் விமான நிலையத்தில் இறங்கிய போது அங்கு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் பயணமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றார். பின் அங்கிருந்து அவர் லண்டன் சென்றார்.

இந்தப் பயணத்தில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் செல்கின்றனர்.

தொழில்முதலீடுகளை ஈர்க்க லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் செல்வதாகவும், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று லண்டன் சென்ற முதல்வருக்கு அங்குள்ள தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆனால் முதல்வர் வந்த அதே நேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்குள்ள தமிழர்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.

Photos: லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இதனால் முதல்வரும், அமைச்சர்களும் மாற்று வழியில் சென்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கைகளில் நீட்டை தடைசெய், புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.  அவர்கள் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.EXCLUSIVE: என்னை அறியாமல் கண்ணீர் விட்டேன்... தங்க மங்கை பி.வி.சிந்து


லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!


Published by:Sheik Hanifah
First published: