• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெல்லி கலவரத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம்...!

டெல்லி கலவரத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம்...!

பெரியகுளத்தில் 17வது நாளாகப் போராட்டம்

பெரியகுளத்தில் 17வது நாளாகப் போராட்டம்

  • Share this:
    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், டெல்லி கலவரத்தைக் கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

    குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் 13வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது, பெண் ஒருவருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. விக்னேஷ் என்பவரின் மனைவி பாக்யலட்சுமிக்கு, போராட்ட மேடையில் இஸ்லாமியர்கள் பூமாலை மற்றும் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தினர். அதில் பங்கேற்றவர்களுக்கு குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய தாம்பூலப் பை வழங்கப்பட்டது.



    குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கரீம் நகரில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன. பாதுகாப்புப் பணியில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தொடர்ந்து 17வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லி கலவரத்தை கண்டித்து கண்ணில் கருப்புத்துணியை கட்டிய போராட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பாரத மக்கள் இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. மணமேல்குடி வடக்கூர் அம்மன் ஆலயத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Also see:

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: