Home /News /tamil-nadu /

நாகப்பட்டினத்தில் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

நாகப்பட்டினத்தில் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

நாகப்பட்டினம் போராட்டம்

நாகப்பட்டினம் போராட்டம்

தயாநிதி மாறன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரைக் கைது செய்யவேண்டும் என்று நாகையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் சமூக இடைவெளியுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை சிவசக்தி நகர் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் பேரவை சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் பதாகைகளை கையில் ஏந்தியபடி சமூக இடைவெளியை பின்பற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த பொதுமக்கள் இருவரும் எம்.பி பதவியை ராஜினாமா செய்வெண்டும் என்றும், இருவரையும் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை ஜாமின்


பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் நடராஜன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். நாகையில் அனுமதி பெறாமல் தி.மு.கவிற்கு எதிராக பெண்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:


 
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி