பட்டியலினத்தின் 7 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் கொண்டுவர அரசாணை வெளியிடப் பரிந்துரை செய்வதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதைக் கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் விருதுநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
அப்போது அங்கு சென்ற அதிமுகவினர் அவர்களை சிறையில் அடைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அந்த தனியார் திருமண மண்டபம் முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவினரை சமாதானம் செய்தனர். அதனையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். அதன்பின் மறியலில் ஈடுபட்ட வெள்ளாளர் சமுதாயத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்