முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த பாடகி சின்மயிக்கு அனுமதி மறுப்பு!

தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த பாடகி சின்மயிக்கு அனுமதி மறுப்பு!

பாடகி சின்மயி

பாடகி சின்மயி

உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • Last Updated :

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த பாடகி சின்மயி அனுமதி கோரிய நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இந்த புகார் ஆதாரமற்றது என்று கூறி விசாரணைக்குழு அறிக்கை சமர்பித்தது.

இதனை அடுத்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் வெளியே போராட்டமும் நடத்தினர்.

சென்னையில் பாடகி சின்மயியும் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, அதற்காக அனுமதி வழங்கும் படி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு காவல் துறை போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது.

top videos

    First published:

    Tags: Chinmaiy, Justice Ranjan Gogai