சோப்பு, மாஸ்க் இல்லை; உயிரிழந்த பணியாளர்களுக்கு இழப்பீடு இல்லை -  சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொரோனா தடுப்பு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை என்று மாநகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

சோப்பு, மாஸ்க் இல்லை; உயிரிழந்த பணியாளர்களுக்கு இழப்பீடு இல்லை -  சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
News 18
  • News18
  • Last Updated: June 18, 2020, 10:58 PM IST
  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள் வரை கொரோனாவுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நாள்தோறும் நோய் பரவல் தடுப்பு பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக, 33 ஆயிரம் களப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி தரவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

கை கழுவ தண்ணீர், சோப்பு, முககவசம், கையுறை கூட சரியாக வழங்குவதில்லை என்றும், சில மண்டலங்களில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லை என்றும், சில மண்டலங்களில் உணவு வழங்குவதே இல்லை என்றும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படிக்கஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு
பணியாளர்கள் பணிக்கு வந்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பேருந்துகள் போதிய அளவில் இல்லாததால் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு வரும் சூழல் உள்ளது, எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தொற்று ஏற்பட்டுள்ள பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், இதுவரை உயிரிழந்து உள்ள 4 பணியாளர்களுக்கு தலா 50 லட்சம் இழப்பீடும் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading