நாகர்கோவிலில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்... 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

Web Desk | news18-tamil
Updated: September 11, 2019, 9:34 PM IST
நாகர்கோவிலில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்... 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
மாதிரி படம்
Web Desk | news18-tamil
Updated: September 11, 2019, 9:34 PM IST
நாகர்கோவிலில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் பஞ்சகர்மா, வர்மா & மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த மசாஜ் சென்டரில் காலை முதல் இரவு வரை ஆண்கள் அதிக அளவில் வந்து சென்றது அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


இதனை அடுத்து அதிரடியாக உள்ளே புகுந்த போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அறையில் அரைகுறை ஆடையுடன் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான ஆதர்ஷ், நாகர்கோவிலைச் சேர்ந்த 26 வயதான அபிசேக் ஆகிய இரண்டு ஆண்களும், அவர்களுடன் இரண்டு பெண்களும் இருந்தனர்.

இதை அடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஏஜென்டை தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குமரியில் இருவரை போலீசார் கைது செய்த நிலையில், ஆசாரிப்பள்ளத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Loading...

Also Watch

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...