Home /News /tamil-nadu /

ராமாயண போட்டியில் வென்ற இஸ்லாமிய மாணவர்கள்... தமிழருவி மணியன் வாழ்த்து

ராமாயண போட்டியில் வென்ற இஸ்லாமிய மாணவர்கள்... தமிழருவி மணியன் வாழ்த்து

சாதிகள் இடையே சமத்துவம், மதங்கள் இடையே நல்லிணக்கம் அமைவதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்!

சாதிகள் இடையே சமத்துவம், மதங்கள் இடையே நல்லிணக்கம் அமைவதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்!

இந்தியா என்பது இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும், சீக்கியர்களும், பௌத்த, சமண மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான, வேற்றுமை அற்ற புனிதம் செறிந்த நாடு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
    ராமாயண மாதத்தை ஒட்டி DC புத்தக நிறுவனம் மாநிலம் தழுவிய ராமாயண வினாடி வினா போட்டியில் வென்ற வாபி மாணவர்களை பாராட்டி காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தனது அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டார்.

    சாதிகள் இடையே சமத்துவம், மதங்கள் இடையே நல்லிணக்கம் அமைவதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்! என்ற தலைப்பில் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர்..

    கேரள மாநிலத்தில் சமய நல்லிணக்கத்தை இந்த மண்ணில் வளர்த்து எடுக்க முயலும் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியுறும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. மலப்புரம் மாவட்டத்தில் வலஞ்சேரி என்ற இடத்தில், கே கே எஸ் எம் என்ற இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத் தரும் கலை அறிவியல் கல்லூரியில் இந்து, சீக்கியம், பௌத்தம் போன்ற சமயங்களின் தத்துவங்கள் அனைத்தும் கற்பிக்கப்படுகின்றன.

    இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் இந்தியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்றும், இந்திய மக்கள் அனைவரும் இவற்றைப் படிக்க வேண்டும் என்றும், இராமாயணத்தின் நாயகனான இராமர், சகிப்புத் தன்மையையும், அமைதியையும் போதித்து நீதியின் உருவகமாக செயல்பட்டவர் என்றும், இந்த இரண்டு முஸ்லிம் மாணவர்களும் பதிவு செய்து உள்ளதை, மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைக்கும் பிளவு சக்திகள் அனைத்தும் மனதில் நிறுத்த வேண்டும்.

    மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் கே கே எஸ் எம் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகிகளுக்கு, நாம் அனைவரும் தலை வணக்கம் செய்ய வேண்டும். இந்தியா என்பது இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும், சீக்கியர்களும், பௌத்த, சமண மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான, வேற்றுமை அற்ற புனிதம் செறிந்த நாடு என்பதை 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கும் சூழலில் ஒவ்வொருவரும் பூரணமாக உணர்ந்து, சாதிகள் இடையே சமத்துவம், மதங்கள் இடையே நல்லிணக்கம் அமைவதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

    அனைத்து இந்தியர்களும் கட்டாயம் படிக்க வேண்டும்.. ராமாயண போட்டியில் வென்ற இஸ்லாமிய மாணவர்கள்

    ஓர் இந்து பைபிளில் உள்ள கர்த்தரின் மலைப்பொழிவை அவசியம் படிக்க வேண்டும். நபிகளாரின் எளிமையும், நேர்மையும் நிறைந்த தூய வாழ்க்கை முறையை, இஸ்லாமியத் திருமறையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சமயம் கடந்து இந்து மதத்தின் சாரம் உணர வேண்டும். மதத்தை வைத்து மக்களைப் பிளக்க வரும் எல்லா அழிவு சக்திகளிடம் இருந்தும், ஒவ்வொருவரும் விலகி நிற்க வேண்டும். மத நல்லிணக்கத்தின் வடிவமாகத் தங்களை வெளிப்படுத்தி உள்ள மாணவர்கள் முகமது ஜமீர், முகமது பஷீர் ஆகிய இருவரையும், நாம் அனைவரும் நெஞ்சில் வைத்துப் போற்ற வேண்டும் என்றார் தமிழருவி மணியன்.
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Kerala, Quiz, Tamilaruvi Manian

    அடுத்த செய்தி