Home /News /tamil-nadu /

முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களைவிட தன் வீட்டு மக்கள் மீதுதான் கவலை: எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களைவிட தன் வீட்டு மக்கள் மீதுதான் கவலை: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆர்ப்பாட்டம்

வேலை இழந்து மக்கள்  கஷ்டப்பட்டுகொண்டு இருக்கும் இந்த தருணத்தில் இந்த விடியா அரசு மக்கள் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு சொத்து வரியை உயர்த்தியுள்ளது என்றும் மத்திய அரசு எவ்வளவு வரியை உயர்த்த வேண்டும் என்று கூறாத நிலையில் மத்திய அரசு மீது பழியை போட்டு தமிழக அரசு வரியை உயர்த்தியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை என்றும் தன் வீட்டு மக்களை பற்றிதான் அக்கறை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை  கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘ திமுக ஆட்சி அமைந்தால் விடியல் வரும் என்று சொன்னார்கள். ஆனால், எந்த விடியலும் வரவில்லை. மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சொத்துவரியை திரும்ப பெற வேண்டும்.  ஆட்சிக்கு வந்தால் ஒன்று; ஆட்சியில் இல்லாமல் இருந்தால் ஒன்று என ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று விமர்சித்தார்.

    அதிமுக ஆர்ப்பாட்டம்


    திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர்,  ‘கொரோனா தொற்றால் 2 ஆண்டு காலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை இழந்து மக்கள்  கஷ்டப்பட்டுகொண்டு இருக்கும் இந்த தருணத்தில் இந்த விடியா அரசு மக்கள் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு சொத்து வரியை உயர்த்தியுள்ளது. மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியுள்ளது.  ஸ்டாலின் முதலமைச்சரானதில் இருந்து மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. வீட்டு மக்களை பற்றிதான் கவலைப்படுகிறார்.

    மேலும் படிங்க: சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் : சென்னையில் ஓபிஎஸ், திருச்சியில் இபிஎஸ் பங்கேற்பு


    நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாத ஆட்சி தமிழகத்தில்  நடந்துகொண்டு இருக்கிறது. எவ்வளவு வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கூறவில்லை. ஆனால் மத்திய அரசு மீது தமிழக அரசு பழியை போடுகிறது. சொத்து வரி அதிகரிக்க மாட்டாது என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Edappadi palanisamy, Property tax

    அடுத்த செய்தி