திருவாரூரில் சொத்து தகராறில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து பெண் மீது ஊற்றிய கொடூரம்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வேம்பனூர் மெயின் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி (வயது 30). அவரது கணவரின் அண்ணன் மனைவி பத்மாவதி( வயது 32) சொத்து தகராறு காரணமாக கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றியதில் பலத்த காயமடைந்த அருள்செல்வி குடவாசல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அருள்செல்வி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பத்மாவதி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து பத்மாவதியை குடவாசல் காவல்துறையினரால் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருள்செல்வி தனது கணவர் செந்தில்குமார் மற்றும் 6 வயது மகனுடன் வேம்பனூர் மெயின் ரோட்டில் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது கொழுந்தனார் ஜெய்சங்கர் குடும்பத்துக்கும் அடிக்கடி பூர்வீக சொத்து பிரச்சனை காரணமாக சண்டை வரும் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று அருள்செல்வி கணவரின் அண்ணன் மனைவி பத்மாவதி அவரது மாமனாரிடம் எங்களுக்குள்ள இடத்தை பிரித்துக் கொடுங்கள் நாங்கள் வேலி வைக்க வேண்டும் என்று வீட்டின் பின்புறம் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அருள்செல்வி, மாமனாரிடம் பேசி எல்லா இடத்தையும் நீ வாங்க பார்க்கிறாயா என்று அவரது வீட்டு கொல்லைப்புறத்தில் நின்றுகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது பத்மாவதி தகாத வார்த்தைகளால் அருள்செல்வியை திட்டியபடி நான் எனது மாமனாரிடம் இடத்தை கேட்டால் உனக்கு என்ன என திட்டி கையில் வைத்திருந்த வெந்நீரை எடுத்து வந்து அருள்செல்வி மீது ஊற்றியுள்ளார்.
இதில் அருள் செல்வியின் வலது கை வலது கால் முதுகு ஆகிய இடங்களில் பலத் காயம் ஏற்பட்டது. பத்மாவதியுடன் வந்த ஜெய்சங்கர் அருட்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தோள்பட்டையில் தாக்கியுள்ளார். மேலும் பத்மாவதியின் அம்மா ஜீவரத்தினம் அருள்செல்வியின் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து குடவாசல் காவல்துறையினரிடம் அருள்செல்வி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்மாவதி ஜெய்சங்கர் ஜீவரத்தினம் ஆகியோரை காவல்துறையினர் குற்றவாளிகளாக சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர். இதில் பத்மாவதி மட்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துப் பிரச்னையில் பெண் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: செந்தில்குமரன் (திருவாரூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.