பட்ஜெட்டில் திட்டநிலை அறிக்கையையும் சேர்த்து வெளியிடணும் - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

’பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்த அறிக்கையையும் சேர்த்தே வெளியிட வேண்டும்’

பட்ஜெட்டில் திட்டநிலை அறிக்கையையும் சேர்த்து வெளியிடணும் - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை
’பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்த அறிக்கையையும் சேர்த்தே வெளியிட வேண்டும்’
  • News18
  • Last Updated: February 13, 2020, 2:13 PM IST
  • Share this:
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது திட்டநிலை அறிக்கையையும் சேர்த்தே தாக்கல் செய்ய வேண்டும் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

2020-21 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், பல அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போதும் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதும் சிறப்புத் திட்டங்கள் பல புதிது புதிதாக அறிவிக்கப்படுகின்றன.

இவை குறித்த செயல் அறிக்கை எதுவும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாவதில்லை. எனவே, பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அல்லது பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்த அறிக்கையையும் சேர்த்தே நிதி அமைச்சர் வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: TN Budget | பட்ஜெட் கூட்டத்தொடரில் CAA, ஹைட்ரோ கார்பன், குரூப் - 4 தேர்வு முறைகேடு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading