சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்து காற்று மாசுபடுவதைக் குறைக்கின்ற வகையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக தமிழக அரசால் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019 உருவாக்கப்பட்டு கடந்தாண்டு வெளியிடப்பட்டது. தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் சென்னை போன்ற நகரங்களிலுள்ள பொதுப் போக்குவரத்து அனைத்தையும் மரபுசார் எரிசக்தி மூலம் இயக்கும் வகையில் மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் சமீபத்தில் தமிழக போக்குவத்துறை மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது தொடர்பான செயல்திட்ட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அதில் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட மின்சார வாகன கொள்கையை தீவிரமாக செயல்படுத்த முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டிலுள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களில் மின்சார வாகனங்களை ரீசார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த நகரங்களில் 25 கி.மீ தூர இடைவெளியில் ஒரு மின்சார ரீசார்ஜ் நிலையம் அமைக்கப்படும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்த 6 நகரங்களில் ஓடுகின்ற அனைத்து ஆட்டோக்களும், கால்டாக்சிகளும் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக ரூபாய் 50,000 கோடி முதலீட்டை எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டிற்கும் 1,000 மின்சார பேருந்துகள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டு இயக்கப்படும். தனியார் நிறுவனங்களும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான உதவியை அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also read: பக்தர்கள் வரத்து குறைவால் வெளிவரும் வனவிலங்குகள்: சென்சார் கேமராக்கள் பொருத்திய திருப்பதி நிர்வாகம்
இந்தியன் ஆயில் நிறுவனம் சேலம் மற்றும் நாமக்கலில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அந்த அறிக்கையில், இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தியை உண்டாக்கும், உள்ளூர் வேலைவாய்ப்பும் பெருகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் குறித்து உச்ச நீதிமன்ற மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசு வகுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும். 1961 ஆண்டு 2019 வரையிலான கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து வகையான வாகனங்களின் எண்ணிக்கை 2.90 கோடியாகும். இதில் 23% வாகனங்கள் 1961 முதல் 2004 வரையிலான காலத்தில் பதிவு செய்யப்பட்டவை. இதில் தற்போது 10.3% வாகங்னங்கள்தான் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்த வாகன எண்ணிக்கையில் 77% வாகனங்கள் 2004ம் ஆண்டிற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்டவை. அரசின் மின்சார வாகன கொள்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.