• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை

உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை

மதுவிற்பனை

மதுவிற்பனை

ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பீர் ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்ய தடை.

  • Share this:
    உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மது விற்பனை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி விற்பனை செய்தால் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கும் ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் நடைபெறுகிறது.

    இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு மற்றும் தற்செயல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 7 தேதி காலை 10 மணி முதல் 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12ஆம் தேதி அன்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் மது கூடம் மற்றும் மதுபான கடைகள் மூடி இருக்க உரிய ஆணைகளை வெளியிட உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதன் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபான மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபான கடைகள் மற்றும் மதுகூட மூடுவதற்கு அரசானை எண் 35 உள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கடந்த 27ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

    எனவே வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதியிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணப்படும் பகுதிகளிலும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பீர் ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ, மது கூட திறப்பதோ அல்லது அதனைக் இப்பகுதியில் எடுத்துச் செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது.

    Must Read : பஞ்சு மிட்டாய் சாப்பிட்டவாறு ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

    மீறுபவர்கள் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: