• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலை பாக்கெட்டுகள் இருப்பு வைத்து விற்பனை; 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலை பாக்கெட்டுகள் இருப்பு வைத்து விற்பனை; 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பெங்களூரில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து சேலம் மகுடஞ்சாவடி எர்ணாபுரத்தில் மதனின் வீட்டிலும் அவரது நண்பரது வீட்டிலும் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

  • Share this:
தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் இருப்பு வைத்து விற்பனை செய்து வந்த நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 23.6.2021 அன்று செவ்வாய்பேட்டை பகுதியில் போதை பொருள் குற்றங்கள் சம்மந்தமாக போலீசார் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் தேர்வீதி அருகில் வந்த போது அவரை விசாரித்ததில்,  மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஹான்ஸ் புகையிலை பாக்கெட் வைத்திருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் செவ்வாய்பேட்டை பஜாரில் கடை வைத்திருக்கும் பரத்சிங் , ஓம்சிங் , தீப்சிங் ஆகியோர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பது தெரிய வந்து ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது . அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மகுடஞ்சாவடியை சேர்ந்த மதன் என்பவருடன் சேர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காலாவதியான புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து சேலம் மகுடஞ்சாவடி எர்ணாபுரத்தில் மதனின் வீட்டிலும் அவரது நண்பரது வீட்டிலும் யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொண்டு , அவ்வப்போது சேலம் செவ்வாய்பேட்டையில் அதிக விலைக்கு நேரிலும் , போன்மூலமாகவும் , விற்பனை செய்து வந்துள்ளனர் .

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மொத்த எடை 2000 கிலோ , மதிப்பு சுமார் ரூபாய் 20 லட்சம் ஆகும் . இதனையடுத்து செவ்வாய்பேட்டை காவல் நிலைய குற்ற எண் .272 / 2021 , ச.பி. 273 , 328 , 511 இதச உடன் இணைந்த பிரிவு 57 , 59 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2006 மற்றும் பிரிவு 77 , சிறார் நீதி ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் , 2015 இ பிரிவு 6 , 24 ( 1 ) , சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் , 2003 - ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also read: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்: நாகநாதன்

அண்டை மாநிலத்தில் இருந்து மொத்தமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி வந்து சேலம் மாநகரில் குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் சில்லறையாக பலருக்கு விற்பனை செய்ததன் மூலம் பொது சுகாதாரம் பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டது தெரிய வந்ததையடுத்து,செவ்வாய்பேட்டையை சேர்ந்த பரத்சிங் (வயது 25 ), ஓம்சிங் (வயது 28) ,  தீப்சிங் (வயது 32 ), மற்றும் மகுடஞ்சாவடியை சேர்ந்த மதன் (வயது 31)   ஆகியோர் குண்டர் சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் .

சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு நஜ்முல் ஹோதா, மேற்படி நால்வரையும் குண்டர் சட்டத்தில் தடுப்புக்காவலில் வைக்க 5.7.2021 அன்று ஆணை பிறப்பித்தார் . மேற்படி தடுப்புக்காவல் ஆணை எதிரிகளுக்கு சேலம் மத்தியசிறையில் சார்வு செய்யப்பட்டது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: