• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொகுதி பங்கீடு: கொஞ்சம் கீழிறங்கி வந்த தேமுதிக.. சற்று மேலேறிய அதிமுக!

தொகுதி பங்கீடு: கொஞ்சம் கீழிறங்கி வந்த தேமுதிக.. சற்று மேலேறிய அதிமுக!

கோப்பு படம்

கோப்பு படம்

அதிமுக தரப்பில் எவ்வளவு இடம் தருகிறார்கள் என்பதை தலைவரிடம் சொல்ல இருக்கிறோம்...

  • Share this:
    தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக-தேமுதிக இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப் படாமல் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இது குறித்து தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக சற்று மேலேறி வந்திருக்கிறார்கள் என்றும், நாங்கள் கொஞ்சம் கீழிறங்கி வந்து இருக்கிறோம் எனவும் கூறினார்.

    மேலும் “தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நாளைக்குள் முடிந்துவிடும் என்று கூறிய பார்த்தசாரதி 41-ல் இருந்து இப்போது 23 இடங்களை கேட்கிறோம் என்றும், அதிமுக தரப்பில் எவ்வளவு இடம் தருகிறார்கள் என்பதை தலைவரிடம் சொல்ல இருக்கிறோம் என்றும் கூறினார்.

    அத்துடன், எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த குழப்பமும் இல்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். எனவே, முட்டல் மேதலும், இழுபறியுமான நீடித்துவந்த அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முடிவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இந்நிலையில், அதிமுக-தேமுதிக இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிரேமலதா, எல்.கே.சுதீஸ் அகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Must Read : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? - வைகோ பதில்

     

    இதற்கிடையே, இன்று தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலை கட்சி அலுவலகத்தில் நடத்தினார் விஜயகாந்த்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: