மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த நிர்மலா தேவி கைது

news18
Updated: April 16, 2018, 8:09 PM IST
மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த நிர்மலா தேவி கைது
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியை நிர்மலா
news18
Updated: April 16, 2018, 8:09 PM IST
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகள் நிர்மலா தேவியால் பாலியல் தேவைகளுக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்துவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகின.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு மாணவிகளிடமும் ஸ்பீக்கர் மூலம் பேசிய உதவிப் பேராசிரியை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேராசிரியரை கைது செய்யும்படி மாணவர்களும், சமூக நல ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7 மணி நேரமாக வீட்டினுள் இருந்த நிர்மலா தேவியை வீட்டின் கதவை உடைத்து காவல் துறையினர் கைது செய்தனர். மாணவிகளை தவறாக பேராசிரியர் வழிநடத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கும் நிலையில் நிர்மலா தேவி மீது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை தவறு செய்ய வற்புறுத்தி கடத்த முயற்சிப்பது, ஆபாசமாக பேசி வன்கொடுமை செய்தல் என்ற இரு பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்