தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் (Pongal) பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பொங்கல் பரிசு தொகுப்பு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைப்பெற்று வருகிறது.
Also Read : இந்தியாவில் உள்ள முதல்வருக்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி புகழாரம்
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புகளை ஏற்றிச் செல்வதற்கு லாரிகள் வந்தன. சுமைதூக்குவோர் பொங்கல் பரிசு பொருள் ஏற்றுவதற்கு கூலி கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது அதை ஒப்பந்தம் எடுத்தவர்கள் தர மறுக்கவே சுமைதூக்கும் தொழிலாளர்கள் பொங்கல் பரிசு பொருட்களை லாரியில் ஏற்ற மறுத்து விட்டனர்.
இதனால் காரைக்குடி தாலுகா ரேசன் கடைகளுக்கு பொங்கல் பரசு பொருள் அனுப்புவதில் சிக்கில் ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதனால் பொங்கல் பரிசு பொருள்கள் ஏற்ற வந்த லாரிகள் காத்திருந்தன.
செய்தியாளர் : முத்துராமலிங்கம், காரைக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.