ரேஷன் கடையில் கைரேகை பதிவதில் சிக்கல்.. தமிழக அரசு சூப்பர் உத்தரவு
ரேஷன் கடையில் கைரேகை பதிவதில் சிக்கல்.. தமிழக அரசு சூப்பர் உத்தரவு
மாதிரிப்படம்
Ration shop : பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குத்தடையின்றி வழங்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்களை ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.
பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை. இதன்காரணமாக அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் வழங்கக்கூடாது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கும் கைரேகை பதிவாதில்லை அதிகாரிகளிடம் கூறினாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்க அனைத்து நியாயவிலைக் விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதில் ,குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால் நியாயவிலைக்கடை செயல்பாடுகள் குறைந்துள்ளது. QR குறியீடு அங்கீகரிக்கப்படாத நேர்வுகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்து, உரிய பதிவேட்டில் ஒப்புதலைப் பெறவேண்டும்.குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.