திருமணத்திற்காக வெளியூர் செல்வோர் இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்வதில் சிக்கல்!

இ-பதிவு

இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 • Share this:
  இ-பதிவு செய்து வெளியூர் பயணிப்பவர்கள் திருமணத்துக்காக செல்ல விண்ணப்பிக்க இயலாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  அதன்படி, கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தொடர்ந்து, தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ-பதிவு அவசியம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

  திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை (https://eregister.tnega.org) இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இன்று முதல் இந்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இன்று காலை முதல், திருமணத்திற்காக செல்வோர் இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்வதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது.

  அதுமட்டுமின்றி, இ-பதிவு இணையதளத்தில் இருந்து திருமணத்திற்கு பயணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டதால் குழப்பம் நீடித்த நிலையில் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.  அதன்படி, இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: