பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகின்ற 22ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முதல்முறையாக ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவதற்கு முன்னதாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் ஆன்லைன் வழி பயிற்சி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது பயிற்சி தேர்வுக்கு பதிவு செய்வதற்கான இணையதள பக்கம் சர்வர் கோளாறால் முடங்கி இருக்கின்றது. மேலும், இதுகுறித்த அறிவிப்பை முழுமையாக மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
Also read: நீட் அச்சத்தால் மதுரை மாணவி உயிரிழப்பு: தற்கொலை செய்யும் முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை
இன்னும் தேர்வுக்கு 9 நாட்களே உள்ள நிலையில் பயிற்சி தேர்வு இல்லை அதற்கான சர்வர் முடக்கம்,தேர்வு அட்டவணை வெளியாக சூழல் உள்ளிட்டவற்றால் திட்டமிட்ட தேதியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது