ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Pro Kabaddi League: குஜராத் ஜெயண்ட்ஸிடம் வீழ்ந்த ஜெய்ப்பூர் பிங் பேந்தர்ஸ் அணி!

Pro Kabaddi League: குஜராத் ஜெயண்ட்ஸிடம் வீழ்ந்த ஜெய்ப்பூர் பிங் பேந்தர்ஸ் அணி!

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3வது லீக் ஆட்டத்தில் தீபக் நிவாஸ் தலைமையிலான ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொண்டது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3வது லீக் ஆட்டத்தில் தீபக் நிவாஸ் தலைமையிலான ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொண்டது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3வது லீக் ஆட்டத்தில் தீபக் நிவாஸ் தலைமையிலான ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொண்டது.

 • 2 minute read
 • Last Updated :

  புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங் பேந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

  8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 'நடப்பு சாம்பியன்' பெங்கால் உள்ளிட்ட 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.

  முதல் நாளான நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி (யு மும்பா) 46-30 புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அரங்கேறிய 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டி 40-40 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

  இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3வது லீக் ஆட்டத்தில் தீபக் நிவாஸ் தலைமையிலான ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் தொடக்கத்தில் ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வால் அபாரமாக ரெய்டு சென்று தனது அணிக்காக புள்ளிகளை சேர்த்து முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் பின்னர் குஜராத் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை தங்கள் பக்கமாக திருப்பி சிறிய லீட்டை பெற்றுத்தந்தனர்.

  Also read:  Pro Kabaddi League - புரோ கபடி லீக்- இன்றைய போட்டிகள்

  இதன் மூலம் முதல் பாதியில் குஜராத் அணி 19-17 என்ற சிறிய முன்னிலையில் இருந்தது. இரு அணி வீரர்கள் மாறி மாறி புள்ளிகள் பெற்று வந்ததால் ஆட்டம் நிறைவடைய ஐந்து நிமிடங்கள் இருந்த வரையில் புள்ளிகள் சமனில் இருந்தன. இதன் பின்னர் குஜராத் அணி மீண்டும் சிறிய முன்னிலையை பிடித்தது. ஆட்டத்தின் கடைசி 3 நிமிடங்களில் டூ ஆர் டை ரெய்டு சென்ற ஜெய்ப்பூர் வீரர் நவீனை குஜராத்தின் பாஹல் திறம்பட மடக்கவே ஆட்டம் முழுமையாக குஜராத்துக்கு சாதகமாக மாறியது. இறுதியாக 34-27 என்ற வித்தியாசத்தில் குஜராத் அணி, ஜெய்ப்பூரை வீழ்த்தி வெற்றியை ருசித்தது.

  இரவு 8.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஜோகிந்தர் நர்வால் தலைமயிலான டெல்லி அணி - புனே அணியை எதிர்கொள்கிறது.

  இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பலம் வாய்ந்த பாட்னா அணியை ஹரியானா அணி எதிர்கொள்கிறது.

  First published: