Home /News /tamil-nadu /

சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் பிரியா..

சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் பிரியா..

சென்னை மேயர் பிரியா

சென்னை மேயர் பிரியா

Chennai Mayor priya : சென்னை மாநகராட்சி மேயராக பட்டியல் பிரிவு பெண் பிரியா இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. சென்னை, தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியை ஒரு பெண் மேயர் ஆளும் வாய்ப்பு உருவானது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.  அதில், வடசென்னை பகுதியான திரு.வி.க.நகரிலுள்ள 74-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியாவை திமுக மேயர் வேட்பாளராக அறிவித்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயராக பிரியா இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவரது குடும்பம் 40 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் புதன்கிழமை பதவியேற்று கொண்டனர். அதைத்தொடர்ந்து 21 மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதே போன்று 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்வதற்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    Must Read : சேலம் மேயருக்கு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரை அறிவித்த தி.மு.க- கட்சியினர் வரவேற்பு

    இந்நிலையில்,  துணைமேயர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பிற்பகலில் நடைபெற உள்ளது. ஒரே ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவராக அறிவிக்கப்படும்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai corporation, Local Body Election 2022, Mayor

    அடுத்த செய்தி