தனியார் லாரிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கததால் வரும் திங்கட்கிழமை முதல் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் நிஜலிங்கம் அறிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்காரணை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் மேடவாக்கம் நிஜலிங்கம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தனியார் தண்ணீர் லாரிகளை அரசு அதிகாரிகள் சிறைபிடித்து வருவது தொடர்பாக பலமுறை முயற்சித்தும் அமைச்சரை சந்திக்கமுடியவில்லை என்பதால் இதற்கு தீர்வு காண ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் பின் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் மேடவாக்கம் நிஜலிங்கம் பேட்டியளித்தார். “லாரிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் வரும் திங்கட்கிழமையில் இருந்து லாரிகள் இயங்காது.
இது வேலை நிறுத்தப்போராட்டம் இல்லை.
லாரிகளில் தண்ணீர் எடுக்க போதைய தண்ணீர் கிடைக்காததால் அனைத்து லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்படும். அரசு தண்ணீர் இருக்கும் இடத்தை காட்டினால் நாங்கள் தண்ணீர் எடுத்து லாரிகளை நிறுத்தாமல் இயக்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.