கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை
தாஸ்
  • News18
  • Last Updated: September 10, 2020, 8:29 PM IST
  • Share this:
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ், இவருக்கு வயது 40. இவர் கடந்த இருபது வருடங்களாக பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். தற்போது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஊரடங்கால் வேலை பறிபோனது. இதையடுத்து வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்துள்ளார்.

வீட்டுவாடகை, இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவு,வாங்கிய கடனுக்கு வட்டி என பல்வேறு சிக்கல்களால் தாஸ் மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து நேற்று மாலை தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.
Also read... நீட் தேர்வுக்கு தயாராகிய மாணவர் தற்கொலை- குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்

இதுகுறித்து அவரது மனைவி தீபாவிடம் பேசியபோது, இருபது வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றிய தன் கணவருக்கு ஒருவர்கூட வேலை தரவில்லை என்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.வேலை இல்லாத விரக்தியும், கடனும் தற்கொலை முடிவுக்கு அவரை கொண்டு சென்றுள்ளதாக கண்ணீர் மல்க கூறினார். இரண்டு குழந்தைகள் அவரது மனைவியின் வாழ்வாதாரம் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பாரதி தமிழன் பேசும்போது, சிறிய வயதில் தற்கொலை முடிவுக்கு வந்திருப்பதற்கு காரணம் வேலையின்மையும் வறுமையும் மட்டுமே. எனவே ஊடகத்துறையில் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்வதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் ஊடக நிறுவனங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பணியாளர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.இதேபோன்று ஊடகத்துறையில் வேலை இழந்து வறுமையில் தவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை ஏராளம். இவர்களின் எதிர்காலம் இருண்ட காலமாக மாறி விடக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை அரசுவிரைந்து எடுக்க வேண்டியது அவசியம்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading