Home /News /tamil-nadu /

ஊரடங்கு: உணவின்றி தவிக்கும் தனியார் செக்யூரிட்டி பணியாளர்கள்..!

ஊரடங்கு: உணவின்றி தவிக்கும் தனியார் செக்யூரிட்டி பணியாளர்கள்..!

தனியார் செக்யூரிட்டி

தனியார் செக்யூரிட்டி

உணவு விநியோகம் செய்யும் தன்னார்வ அமைப்புகளும் அல்லது மாநகராட்சியும் அல்லது அந்தந்த குடியிருப்புவாசிகள் இவர்களுக்கு உணவளிப்பது கருணையல்ல, கடமை.

ஊரடங்கு உத்தரவு நேரத்திலும் உழைத்துக் கொண்டிருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவன பாதுகாவலர்கள் உணவின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

ஊரே அடங்கி மக்கள் வீட்டில் இருந்தாலும் அலுவலகங்கள்,வியாபார நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காவலுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த பாதுகாவலர்கள். ஊர் விட்டு ஊர் வந்து இங்கேயே தங்கியிருந்து வேலை செய்பவர்கள், தினந்தோறும் வீட்டிற்கு சென்று வருபவர்கள் இப்படி பலரும் இந்த பணியில் இருக்கிறார்கள்.பகலிலும், இரவு நேரங்களிலும் கொசுக்கடியிலும் வேறு வழியின்றி பணிசெய்யும் இவர்களுக்கு தற்போது உணவு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

மாதம் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்க்கு வேலைசெய்யும் இவர்கள் தற்போதைய சூழலில் வீட்டிலிருந்து உணவு எடுத்து வரமுடியாத நிலை இருப்பதால் அந்தந்த இடங்களிலேயே தங்கியிருக்கிறார்கள். ஆள் பற்றாக்குறையால் பல மணிநேரம் வேலை பார்க்கும் இவர்களுக்கு இன்னமும் சம்பளமும் கொடுக்கப்படவில்லை. வேலை செய்யும்  சம்பந்தப்பட்ட இடத்தின் நபர்கள் இவர்களின் உணவுக்கான உத்தரவாதத்தை கூட கொடுக்கவில்லை என்பது வேதனை.

சாலையில் இருக்கும் ஏழைகளுக்கு வாகனங்களில் வரும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு கொடுத்து வருகின்றன அவர்கள் யாரும் இந்த பாதுகாவலர்களை கண்டு கொள்வதே இல்லை.எங்களுக்கு சாப்பாடு வேண்டுமென்று வாய்விட்டு கேட்கவும் இவர்களுக்கு மனம் வரவில்லை, ஆனால் வயிற்றுப் பசியும் இவர்களை விட்டுவிடுவதாக இல்லை. ஆங்காங்கே திறந்து இருக்கும் ஒரு சில ஹோட்டல்களில் பணம் கொடுத்து உணவு வாங்கும் அளவுக்கு பணமும் இல்லை. எனவே ஆங்காங்கே உணவு விநியோகம் செய்யும் தன்னார்வ அமைப்புகளும் அல்லது மாநகராட்சியும் அல்லது அந்தந்த குடியிருப்புவாசிகள் இவர்களுக்கு உணவளித்தால் இன்னும் கம்பீரமாய் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள் இந்த பாதுகாவலர்கள்.
Published by:Gunavathy
First published:

அடுத்த செய்தி