எந்தக் காரணத்திற்காகவும் தனியார் பள்ளிகள் மாணவர்களை நீக்கக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

சீருடை, பேருந்துக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

 • Share this:
  எந்தக் காரணத்திற்காகவும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவர்களை நீக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பெற்றோர்களே நடந்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை சுட்டிக்காட்டி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2021-22ம் கல்வியாண்டில் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தொகையில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். சீருடை, பேருந்துக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  மேலும் அனைத்து வகை பள்ளிகளும் பின்பற்றவேண்டிய வழிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  அதில், 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும்.
  மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் கால தாமதமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

  ஆன்லைன் வகுப்புகளின் செயல்பாடுகளை அரசின் வழிகாட்டுதலின் படி முதல்வர்கள் கண்காணித்து எந்தவித புகார்களுக்கும் இடமின்றி அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உறுதிப்படுத்திட வேண்டும்.

  எந்தக் காரணத்திற்காகவும் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவர்களை நீக்கவோ, கற்பித்தல் செயல்பாடுகளில் பங்கேற்பதை தவிர்க்கவோ கூடாது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து நாள் தோறும் அலுவலகத்திற்கு புகார்கள் வருகின்றன. அது போன்ற புகார்கள் வராதா வகையில் செயல்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: