• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடனை வசூலிக்க சென்ற இடத்தில் வாக்குவாதம்.. தனியார் நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக் கொலை..

கடனை வசூலிக்க சென்ற இடத்தில் வாக்குவாதம்.. தனியார் நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக் கொலை..

கடனை வசூலிக்க சென்ற இடத்தில் வாக்குவாதம்.. தனியார் நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக் கொலை..

கடனை வசூலிக்க சென்ற இடத்தில் வாக்குவாதம்.. தனியார் நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக் கொலை..

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் கடனை வசூலிக்க சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆலடியூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராமசுப்பிரமணியன் (29). இவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், இன்று தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வசித்து வரும் சண்முகநாதன் (38) என்பவரது வீட்டுக்கு கடன் தவணை வசூலிக்கச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த சண்முகநாதனின் மனைவி, தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடன் தவணையை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது வசூலிக்க வந்தபோது பல முறை கேட்டும் பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சண்முகநாதன் மனைவியை ராமசுப்பிரமணியன் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சண்முகநாதன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராமசுப்பிரமணியனை சரமாரியாக குத்தியுள்ளார்.
    இதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், சாம்பவர்வடகரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று, ராமசுப்பிரமணியனை மீட்டு சிகிசிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடன் பிரச்சினையில் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொலையாளியும், கொலையானவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதயில் பதற்றம் நிலவுகிறது. இதனால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர் - ச.செந்தில், தென்காசி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: