கொரோனா பாதிப்பு: தொழிலாளர்களுக்காக மருத்துவமனை அமைத்த நிறுவனம்

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று, தங்கள் ஊழியர்களுக்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது.

 • Share this:
  ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகிறது Schwing Stetter India Private Limited. இந்நிறுவனம் தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், தனிமைப்படுத்தி கொள்ளவும், அடிப்படை மருத்துவ உதவிகள் செய்து கொடுக்கவும், அரசிடம் உரிய அனுமதி பெற்று, கோவிட் 19 சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளது.

  இந்த மையத்தில் 20 சாதாரண படுக்கை, 5 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. 24 மணி நேரமும், மருத்துவர், செவிலியர்கள் தொற்றாளர்களை கவனித்து வருகின்றனர். தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்படும் கொரோனா தொற்றை குணப்படுத்த, தாமாகவே முன்வந்து வசதி செய்து கொடுத்த நிறுவனத்திற்கு, தொழிலாளர்கள் கைகூப்பி நன்றி தெரிவிக்கின்றனர்.

  செய்தியாளர்: சந்திரசேகரன், காஞ்சிபுரம்

  மேலும் படிக்க... ஆத்தூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை.. தொடர்ந்து உயிழப்புகள் ஏற்படும் அவலம்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: