ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உபயோகித்த சமையல் எண்ணெயில் பயோடீசல் தயாரிக்கும் தனியார் நிறுவனம் !

உபயோகித்த சமையல் எண்ணெயில் பயோடீசல் தயாரிக்கும் தனியார் நிறுவனம் !

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 19 வயது இளைஞர் போக்சோவில் கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 19 வயது இளைஞர் போக்சோவில் கைது

 ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என  உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வீடுகளிலும், ஹோட்டல்களிலும் பஜ்ஜி, போண்டாவிற்கு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து அதிலிருந்து  பயோ டீசல் எடுக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பல ரோட்டோரக் கடைகளில் பயன்படுத்திய எண்ணெயையே மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உபயோகிக்கின்றனர். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும்போது, கருப்பு நிறத்தில் மாறி புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதை பாதுகாப்பின்றி அப்புறப்படுத்தும்போது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். அதனால்தான் அதை பயோடீசல் போன்ற மாற்று எரிபொருள் தயாரிக்க மட்டுமே பயன்படுத்த  வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

பெட்ரோல், டீசலுக்கு ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளை நம்பியே இந்தியா உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் டாலைரை செலவு செய்து வருகிறது. இந்நிலையில் யுரேனஸ் என்ற நிறுவனம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ  டீசல் எடுத்து அசத்தி வருகிறது.

முதல் கட்டமாக பயன்படுத்தப்பட்ட எண்ணெயை யுரேனஸ் நிறுவனம் விலை கொடுத்து நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படும் சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்து பயோ டீசல் தயாரிப்பதாக அந்நிறுவனத்தின் ஆலோசகர் சங்கர் தெரிவிக்கிறார்.

சன்பிளவர் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அனைத்தையும் டீசலாக மாற்ற முடியும் என்கின்றனர் இந்நிறுவனத்தினர்.  சேகரிக்கப்படும் எண்ணெய்க்கு ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 500 கிலோ எண்ணெய் சென்னையில் சேகரிக்கப்படுகிறது.

ஒரு கிலோ எண்ணெயிலிருந்து சுமார் 800 லிட்டர் டீசல் தயாரிக்கப்படுவதாகவும். இவை வழக்கமான டீசலை விட ஏழு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை விலை குறைவாக விற்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக சமையல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் பயோ-டீசல் மூலம் இரு  சக்கர வாகனத்தை தவிர கார், ஆட்டோ, கனரக வாகனம் என அனைத்து வாகனங்களும் இயங்கும் என தெரிவித்துள்ளது. மாற்றத்திற்கு தயாராக வேண்டிய நேரமிது!

Also see... ரீஃபைண்ட் ஆயிலை விட செக்கு எண்ணெய் சிறந்தது.. ஏன் தெரியுமா?

அதன்படி இந்த நிறுவனம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிறிய உணவகம் தொடங்கி நட்சத்திர ஹோட்டல் வரை சென்று சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை காசு கொடுத்து கொள்முதல் செய்கிறது.

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என  உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...

First published:

Tags: Cooking Oil, Diesel