கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நீதி.. 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஒரு நீதியா? அரசு ஆசிரியர்கள் கேள்வி..

பள்ளி மாணவர்களை தவிர்த்து கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்ச்சி அறிவித்திருப்பதில்  உள்நோக்கம் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நீதி.. 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஒரு நீதியா? அரசு ஆசிரியர்கள் கேள்வி..
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றசங்க தலைவர் தியாகராஜன்
  • News18
  • Last Updated: August 27, 2020, 3:39 PM IST
  • Share this:
கல்லூரி மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி என்ற அறிவிப்பினை வெளியிட்டது போல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தேர்வு கட்டணம் செலுத்தி உள்ள தனித்தேர்வு  மாணவர்களுக்கும் முழு தேர்ச்சியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா தொற்றின் தீவிரத்தால் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி  குறிப்பாக நிலுவை பாடங்களுக்கு(அரியர்ஸ்) தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலே அந்த பாடங்களுக்கும் தேர்ச்சி வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஆனால் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் முழுத்தேர்ச்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டு பின்பு பள்ளிகள் வழியாக படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும்தான் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் தனித் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.


Also read... குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன...?தேர்வினை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து  கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வித் துறையில் ஒரு நிலைப்பாடும், பள்ளிக்கல்வித் துறையில் ஒரு நிலைப்பாடும் எடுப்பது ஏற்புடையது அல்ல என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பள்ளி மாணவர்களை தவிர்த்து கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்ச்சி அறிவித்திருப்பதில்  உள்நோக்கம் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், கல்லூரியில் பயில்கின்ற  அரியர் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசு  தலையிட்டு பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத உள்ள சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading