சென்னைபுழல்சிறையில்கைதிகள்சொகுசுவாழ்க்கைவாழ்வதாகவந்தபுகாரைத்தொடர்ந்து, மேலும் 9 சிறை வார்டன்கள்பணியிடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, புழல் சிறையின் முதலாவது பிரிவிலிருந்து 8 வார்டன்களை பணியிட மாற்றம் செய்து, சிறைத்துறை நேற்று முன்தினம் நடவடிக்கை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 2-வது பிரிவில் முதன்மை வார்டன்களாக பணியாற்றி வந்த சூரியநாராயணன், சேரிந்தியா பிள்ளை, இம்மானுவேல், செல்வன், ராஜ்குமார், ஸ்டார்லின் எடிசன், கிருபா ஜெயசிங், வெற்றிவேல், கண்ணதாசன் ஆகிய மேலும் 9 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 9 பேரும், கோவை, வேலூர், சேலம் ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகாரில் முதல் பிரிவில் பணியாற்றிய 8 வார்டன்கள் ஏற்கனவே பணியட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2-வது பிரிவிலிருந்து 9 வார்டன்களை சிறைத்துறை மாற்றியுள்ளது.
Published by:Saroja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.