கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், வாளையாறு மனோஜ், திபு, உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி உள்பட 10 நேரில் ஆஜராகினர். அப்போது சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் கோவை மத்திய சிறையில் உள்ள தங்களை சிறைத்துறையினர் தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் தெரிவித்து மனு அளித்தனர்.
Also read: யோகா கற்கச்சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, 64 வயது யோகா மாஸ்டர் போக்சோவில் கைது..
கடந்த 28ம் தேதி வழக்கு விசாரணையின்போது அது குறித்து மாவட்ட நீதிபதி வடமலையிடம் புகார் தெரிவித்ததாகவும், அப்போது நீதிபதி கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகளை எச்சரித்ததால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் சிறைத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த சயான், நீதிபதியிடம் புகார் தெரிவித்ததால் எந்தவொரு வசதியும் இல்லாத மோசமான அறைக்கு தங்களை மாற்றி உணவு, உடை வழங்காமல் துன்புறுத்துவதாக கூறினார்.
அதனைக் கேட்ட மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி, சயான் குற்றச்சாட்டுகள் குறித்து கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி எச்சரிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும், அந்த மின்னஞ்சலை தனக்கும் அனுப்புமாறும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central jail, Violation