• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் இறக்குமதிக்கு தேவையான உதவிகளை செய்ய ஏதுவாக சிறப்பு திட்டங்களை சிறு குறு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

  • Share this:
படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் விரைவுப்படுத்தப்பட வேண்டும்” என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும்குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் முதல்வர் தலைமையில் நேற்று (5.7.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பெருந்தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் இந்த நிதியாண்டில் வரவுசெலவு திட்ட முதலீட்டு மானிய ஒதுக்கீட்டில் 60 விழுக்காடான ரூ. 168.00கோடி, 1975 தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் உடனடியாக விடுவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலான முறைசார்ந்த கடன் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்க செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு 2021-22ஆம் நிதியாண்டில் முன்னுரிமை அளித்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தவறாமல் எய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சுயவேலைவாய்ப்புத் திட்டங்களில் ஆதிதிராவிடர்/பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகிய பயனாளிகளின் விகிதாசார பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று  முதல்வர் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டை, இந்தியாவின் மிகவும் துடிப்பான புத்தாக்கத்திற்கு உகந்த மாநிலமாக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.

Also read: "கர்நாடக காங்கிரஸ் தலைவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது"- தமிழக காங். பிரமுகர் காட்டம்!

மேலும், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் இறக்குமதிக்கு தேவையான உதவிகளை செய்ய ஏதுவாக சிறப்பு திட்டங்களை சிறு குறு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

நீண்ட காலமாக சிட்கோவில் நிலுவையிலுள்ள, மனை ஒதுக்கீடுகளுக்கு பட்டா வழங்குதல் மற்றும் தொழில் மனைப் பட்டாக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகமான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விண்வெளி வானூர்திகள் ரோபோட்டிக்ஸ் மற்றும் துல்லியமான தொழில்கள் உற்பத்தி ஆகிய உயர் தொழில்நுட்ப துறைகளில் ஈடுபட ஏதுவாக திட்டங்களை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட ஏதுவாக தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற் பேட்டைகளை உருவாக்கி தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: