அச்சு செய்தி இதழ் தொழிலுக்கு நிவாரண உதவிகள் வேண்டும் - பிரதமருக்கு வெங்கடேசன் எம்.பி கடிதம்

சு.வெங்கடேசன், எம்.பி.

அச்சு ஊடகச் செய்தி இதழ் தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
    கடிதத்தில் சு. வெங்கடேசன் தெரிவித்திருப்பதாவது, ”பல செய்தி ஏடுகள் ஏற்கெனவே பக்கங்களை, பதிப்புகளை குறைத்திருக்கின்றன. இருப்பினும் சமூகத்திற்கான தங்களின் தார்மீக கடப்பாட்டை ஈடேற்றி வருகின்றன. இந்த தொழில் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது என்பதை சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சமூகத்திற்கு விழிப்பை ஊட்டுபவர்களாக இருப்பவர்கள்.

    கோவிட் 19ன் கடும் பாதிப்புகள் விளம்பர வருமானத்தை அறவே இல்லாமல் ஆக்கியுள்ளன. இந்த நிலைமை இன்னும் நீண்ட காலத்திற்கு தொடருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய யதார்த்தங்கள் நிலை நிறுத்தப்பட்டு அவை வாழ்க்கை முறையாக மாறுகிற காலம் வரை இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஓர் செய்தி இதழை நடத்துவதற்கு விளம்பர வருமானம் மிக அவசியமானது. ஆதார வளங்கள் இன்மை ஏற்பட்டதால், இதழ் சுற்று எண்ணிக்கையும் சரிந்துள்ளது.
    அச்சு செய்தி இதழ் தொழில் அமைப்புகள் ஏற்கெனவே சில நிவாரண வேண்டுகோள்களை முன்வைத்துள்ளன. அவை மிக மிக நியாயமானவை என்பதால் முழு மனதோடு இந்த கோரிக்கைகளை ஆதரிக்கிறேன்.

    • அச்சு செய்தித் தாள் மீதான சுங்க வரியைக் கைவிட வேண்டும்.

    • நிலுவையில் உள்ள அரசு விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    • அரசு விளம்பரங்களுக்கு 100 சதவீதம் கட்டண உயர்வை வழங்க வேண்டும்.

    • அச்சு ஊடகங்களை அரசின் அறிவிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

    • இரண்டு நிதியாண்டுகளுக்கு வரி விடுமுறை அளிக்க வேண்டும்.


    இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published: