Home » News » Tamil-nadu » PRIME MINISTER SHOULD ANNOUNCE THE REPEAL OF THE THREE AGRICULTURAL LAWS DMK AND ALLIED PARTIES REQUESTED VAI

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் அறிவிக்க வேண்டும்.. திமுக மற்றும் தோழமை கட்சிகள் வலியுறுத்தல்..

மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் அறிவிக்க வேண்டும்.. திமுக மற்றும் தோழமை கட்சிகள் வலியுறுத்தல்..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
  • Share this:
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் ஒன்பது தோழமை கட்சித் தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தை மதிக்காமல் மேலாதிக்க மனப்பான்மையுடன், புராரி மைதானத்துக்கு போனால்தான் பேச்சுவார்த்தை என அழைக்கும் மத்திய அரசின் போக்கை கண்டிப்பதாக கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு மாறாக அவசர கோலத்தில் சட்டமசோதாவை நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாஜக அரசு வீணடித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு புதிய உரிமைகளை அளிப்பதாக பிரதமர் பேசியிருப்பது விவசாயிகளை அவமதிப்பதாக உள்ளதென்றும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் அவர்களை சந்தித்து தீர்வு காண பிரதமர் முன்வராதது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க.. Gold Rate | கடந்த 3 வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,184 வீழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன?

தங்களுக்கு எதிராக பாஜக அரசு கடைப்பிடித்த தந்திரோபாயத்தை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் உணர்ந்ததாலேயே கொதித்து எழுந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருவதாகவும், அவர்களை ஜந்தர் மந்தரில் போரட்டம் நடத்த பிரதமர் அனுமதித்து அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித நிபந்தனையும் இன்றி சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்றும் ஸ்டாலின் உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: November 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading