ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நவம்பர் 11ல் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..

நவம்பர் 11ல் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Pm Narendra Modi | சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நவம்பர் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு  விழாவில் பங்கேற்பதற்காக நவம்பர் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.  பல்கலையில் பயிலும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியும் சிறைப்புரையாற்ற உள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு விழாவை நிறைவு செய்து பின்னர் சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க : வடகிழக்கு பருவமழை வரும் 29ஆம் தேதி தொடங்கும்.. சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை!

  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி இதற்காக திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உள்ளதால் சென்னை மாநகரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

  நவம்பர் 11ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Karthi K
  First published:

  Tags: PM Modi, Tamilnadu